Narendra modi : மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடக்கத்துக்கு வந்தார்.
அங்கு நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை சென்ற பிரதமர், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை அங்கிருந்து விமான நிலையத்திற்கு கார் மூலம் சென்றபின் அங்கிருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார்.
இந்த நிலையில், இன்னு சற்று நேரத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. இதன்பின், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நெல்லை மாவட்டத்துக்கு சென்ற சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்று மாலை மீண்டும் டெல்லி புறப்படுகிறார். இதனிடையே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…