பிரதமர் மோடி வருகை…! சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது…!

ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் அறிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீசார் கைது செய்த நிலையில், வேளாண் சட்டங்கள் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் கொண்டு செல்லும் இடத்தை கைவிட முகிலன் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025