பிரதமர் மோடி வருகை.. #GoBackModi ஹாஷ்டேக் ட்ரெண்டிங்!
பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தரவுள்ளார்.
பிரதமர் மோடி நாளை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க்க உள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்கிறார். பின்னர், கார் மூலம் நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு செல்கிறார்.
அங்கு, பிரதமர் மோடி வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதாகவும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வேளாண் சட்டங்களை பெறாமல் பிரதமர் தமிழகம் வருவதால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது.
பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.