பிரதமர் மோடி வருகை… கருப்பு கொடி காட்டி நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு
Congress : பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி இந்தாண்டு ஐந்தாவது முறையாக நாளை தமிழக வருகிறார். நாள் கன்னியாகுமரியில் நடைபெறும் இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Read More – ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு!
இதனால், கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை குமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் வரை செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
இதுதொடர்பாக அறிக்கையில், 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியினால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.
Read More – பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!
தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூ.37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தரவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.