பிரதமர் மோடி தமிழகம் வருகை – 40 மீனவர்கள் விடுதலை.!

modi tn visit

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த புகாரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து செல்கிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருவதை ஒட்டி இலங்கை சிறைகளில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 40 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார் பிரதமர் மோடி.

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

தற்போது, விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் 2 நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளார்கள். இதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் நாகையை சேர்ந்த 10 மீனவர்கள் என மொத்தம் 40 மீனவர்கள் அடங்குவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்