மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார் – தமிழக பாஜக தலைவர்
மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார்.
சமீப நாட்களாக கர்நாடகாவில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வராக இருந்த எடியூரப்பா அவர்கள், மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருந்தார். அதன்படியே, தற்போதும் முதல்வராக பொறுபேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களும் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சட்ட ரீதியாக மேகதாதுவில் அணை கட்ட சாத்தியமில்லை.
எனவே, தேவையற்றவற்றை பேசி பகையை கொண்டு வருவதைவிட, அறப்போராட்டமாக வலியுறுத்தும் போது, கண்டிப்பாக கர்நாடகா அரசும், அங்கிருக்க கூடிய எதிர்க்கட்சிகளும், நாம் சொல்லுகின்ற விஷயத்தை பார்ப்பார்கள், கேட்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அதையும் தாண்டி, மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.