திருமணத்திற்கு செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை…!குஷ்பூ தாக்கு
திருமணத்திற்கு செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறுகையில், தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் விஷால் மீது கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எதிரணியிடம் ஆதாரங்கள் இல்லை. தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லையென்றால், அங்கு காவல்துறை எப்படி வந்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.