பிரதமர் மோடி சென்னை வருகை..! சாலை போக்குவரத்தில் மாற்றம்..!
பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை:
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சி :
இந்நிலையில், சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முன்னதாக, பிரதமர் பங்கேற்கவிருந்த ராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிக்கு பதிலாக விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதனால் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் :
மேலும், பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும், அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வழியே திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.