நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி காரில் பயணம்

Default Image

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு சென்றார்.சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்திக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம்  மற்றும் பாஜகவினர் வரவேற்றனர்.

தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு  காரில் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.அதனை தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை– விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதாகவும்  கூறப்படுகிறது.மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்