பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக இரு நாட்டு தலைவர்களும் இன்று சென்னை வர உள்ள நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் சென்னை விமானநிலையம் சென்றுள்ளனர்.