தமிழ்நாடு

விவசாயிகளின் போராட்டத்தை மதித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – கட்சித் தலைவர்கள் அறிக்கை

Published by
Venu
விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை பிரதமர் மோடி மதித்து – நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்; விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து, அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அங்கேயே சென்று, இந்த நாட்டின் உயிரைக் காப்பாற்றும் உழைக்கும் வர்க்கமான விவசாயப் பெருமக்களிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அந்த மைதானத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும்; வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். உணவுப் பாதுகாப்பின் கேந்திர மையமாகத் திகழும் வேளாண்மையையும், அதன் உயிரோட்டமாகத் திகழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் காப்பாற்றிட, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மனமார முன்வர வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை நடத்தினார்கள்.ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,
பின்பு டெல்லியில் உள்ள புராரி பகுதியில் போராட அனுமதி அளிக்கப்பட்டது.இதனால் 5-வது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் ,ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்திர பிரதேச விவசாயிகளும் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

இரவில் நடந்து முடிந்த திருமணம்… நாக சைதன்யா – சோபிதாவுக்கு குவியும் வாழ்த்து!

இரவில் நடந்து முடிந்த திருமணம்… நாக சைதன்யா – சோபிதாவுக்கு குவியும் வாழ்த்து!

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம்  இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…

4 hours ago

புயல் பாதிப்பு… புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…

5 hours ago

கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்!

கடலூர்:  பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…

6 hours ago

“அவதூறு பரப்பி ஆதாயம் அடைய மலிவான அரசியலில் சிலர் ஈடுபடுகின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…

6 hours ago

ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி!

சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல்,…

6 hours ago

விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

6 hours ago