அவ்வை, பாரதி பாடல்களை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி.!

Default Image

அவ்வையார் மற்றும் பாரதி பாடல்களை நீர் ஆதாரங்கள், உள்நாட்டு ஆயுத உற்பத்தியை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, அவ்வையாரின், வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்ற பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார்.

நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடி. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து பராமரிக்க வேண்டும். நீர் ஆதாரங்களை சேமிப்பது என்பது உலகாயுத பிரச்சனை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று, ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம், ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம், உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் என்ற பாரதியார் பாடலை மேற்கோள்காட்டினார் பிரதமர் மோடி. தமிழ்நாடு பீரங்கி தயாரிப்பிலும் மையமாக திகழ்கிறது என்றும் 2 பாதுகாப்பு துறை தொழில் பெருந்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

எல்லையை பாதுகாக்க அர்ஜூன் டாங்கி என்கிற வீரனை அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைகிறேன். அர்ஜூன் டாங்கியில் பயன்படுத்தும் வெடிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட எல்லையை பாதுகாக்க தமிழகத்தின் அர்ஜூன் டாங்கி உதவும். பாதுகாப்பு துறையில் தற்சார்பை ஊக்குவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்