இரட்டை இலை சின்னமானது எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம் எனவும், அதற்கு காரணம் வரும் நாடாளுமன்ற தேர்தல் தான். – திருமாவளவன் விமர்சனம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியானது பல்வேறு சிக்கல்கள் பிரிவுகளை சந்தித்து ஒன்றாக இருந்த எடப்பாடி பழனிசாமி , ஓ,பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா எல்லாம் இப்போது தனி தனி பிரிவுகளாக இருக்கிறது. இப்போதைக்கு அதிமுக கட்சி முக்கிய பொறுப்புகளும், இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி வசம் தான் இருக்கிறது.
அதிமுக 4 அணி : இந்த அதிமுக விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர், கிருஷ்ணகிரி, தேன்கனிகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக 4 அணிகளாக உடைவதற்கு மோடி அரசு தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற தேர்தல் : மேலும், இரட்டை இலை சின்னமானது எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம் எனவும், அதற்கு காரணம் வரும் நாடாளுமன்ற தேர்தல் தான் எனவும் அவர் குறிப்பிட்டார். அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி பேசுகையில், திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவன் தான் வெற்றிபெறுவார் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பலமில்லா எதிர்கட்சி : இவிகேஎஸ்.இளங்கோவன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும், இரட்டை இலை எனும் சின்னத்தை சாதமாக வைத்து கூட அதிமுக பலமான எதிர்க்கட்சியாக களத்தில் இல்லை என திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…