PM Modi – இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகலில் செங்கல்பட்டு, கல்பாக்கம் ஈனுலை அணு உலை பணிகளை துவங்கி விட்டு, அடுத்ததாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் , ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் , ஜான் பாண்டியன் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி சென்னைக்கு பல முறை வந்து இருக்கிறார். இந்த முறை தனது குடும்பத்தை காண பிரதமர் மோடி வந்துள்ளார். இங்கு வந்துள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி.
லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று கூறுகிறார். அனால் இதுதான் மோடியின் குடும்பம். தனது 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி நாட்டு மக்களுக்காக ஒரு யோகி போல பிரதமர் மோடி வாழ்ந்து வருகிறார். 4ஆம் தலைமுறைகளாக அரசியலில் இருக்கும் கோபாலபுர குடும்பத்தை அகற்றும் வாய்ப்பு 2024 தேர்தலில் நமக்கு கிடைத்துள்ளது.
நாங்கள் காஞ்சிபுரம் பட்டை பிரதமர் மோடிக்கு அளித்துள்ளோம். அதில் சிறுத்தை, புலி புகைப்படம் அச்சிடபட்டு உள்ளது. 2014இல் இந்தியாவில் 7919 சிறுத்தை, புலிகள் இருந்தது. தற்போது 13,874 சிறுத்தை, புலிகள் இந்தியாவில் உள்ளது. அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இந்த சால்வை அளித்துள்ளோம்.
உள்ளூர் பொருட்களை வாங்க பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார். இன்று பனைமர தொழிலாளர்கள் செய்த பொருட்களை நினைவு பரிசுகளாக வழங்கி வருகிறோம். பாஜக 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வென்று ஆட்சியை பிடிக்கும். அதில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் அனுப்ப வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…