இந்திய மக்களுக்காக ஒரு யோகி போல பிரதமர் மோடி வாழ்ந்து வருகிறார்..  அண்ணாமலை பேச்சு.! 

Annamalai BJP - PM Modi

PM Modi – இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகலில் செங்கல்பட்டு, கல்பாக்கம் ஈனுலை அணு உலை பணிகளை துவங்கி விட்டு, அடுத்ததாக தற்போது சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் , ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் , ஜான் பாண்டியன் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Read More – சென்னையில் பாஜக பொதுக்கூட்டம்..! பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி சென்னைக்கு பல முறை வந்து இருக்கிறார். இந்த முறை தனது குடும்பத்தை காண பிரதமர் மோடி வந்துள்ளார். இங்கு வந்துள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி.

Read More – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.! 

லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று கூறுகிறார். அனால் இதுதான் மோடியின் குடும்பம். தனது 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி நாட்டு மக்களுக்காக ஒரு யோகி போல பிரதமர் மோடி வாழ்ந்து வருகிறார். 4ஆம் தலைமுறைகளாக அரசியலில் இருக்கும் கோபாலபுர குடும்பத்தை அகற்றும் வாய்ப்பு 2024 தேர்தலில் நமக்கு கிடைத்துள்ளது.

நாங்கள் காஞ்சிபுரம் பட்டை பிரதமர் மோடிக்கு அளித்துள்ளோம். அதில் சிறுத்தை, புலி புகைப்படம் அச்சிடபட்டு உள்ளது. 2014இல் இந்தியாவில் 7919 சிறுத்தை, புலிகள் இருந்தது. தற்போது 13,874 சிறுத்தை, புலிகள் இந்தியாவில் உள்ளது. அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இந்த சால்வை அளித்துள்ளோம்.

Read More – கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

உள்ளூர் பொருட்களை வாங்க பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்.  இன்று பனைமர தொழிலாளர்கள் செய்த பொருட்களை நினைவு பரிசுகளாக வழங்கி வருகிறோம்.  பாஜக 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வென்று ஆட்சியை பிடிக்கும். அதில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் அனுப்ப வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்