3- நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!

Published by
murugan

கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 18 வயதுக்குட்பட்ட  5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை அதாவது ஜனவரி 19-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தொடக்க விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி இரவு ஆளுநர் மாளிகை வருகிறார். அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். நாளை மறுநாள் அதாவது ஜனவரி 20-ம் தேதி   காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையதிலிருந்து  திருச்சி செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.

பின்னர் பிரதமர் மோடி நாளை மறுநாள்  மதியம் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, பல வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இரவு  அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் இரவு தங்குகிறார்.

 

 

Recent Posts

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

49 minutes ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

2 hours ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

2 hours ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

3 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

3 hours ago

“ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது”.. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!

சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…

4 hours ago