இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி-பாதுகாப்பு தீவிரம்.!
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர இருக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்ற மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
2018-19, 2019-20 கல்வியாண்டில் பயின்ற 2,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த விழாவில் பட்டம் பெற இருக்கின்றனர். மோடியின் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமரின் விமானம் தரையிறங்கும்,மதுரை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விமான நிலைய வளாகத்தில் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் நகர் முழுவதும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் திண்டுக்கல் கலெக்டர் விசாகன், டிஐஜி (DIG) போலிஸ் மற்றும் மற்ற மூத்த அதிகாரிகள் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.