கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
PM Modi: கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தலைநகர் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கத்திற்கு சென்றார்.
அங்கு அணுசக்தி மின் நிலைய வளாகத்தில் ஈனுலையில் தொடக்க பணிகளை அவர் பார்வையிட்டார். 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை துவங்கி வைத்த பிரதமர் ஈனுலை தொடர்பாக அங்கிருந்த விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.
Read More – Shivratri 2024: ஈஷா மஹாசிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்.!
500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஈனுலையை அணுசக்தி துறையின் பாவினி நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார் மோடி. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை மாநாடு என்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.