சென்னை to நாகர்கோவில், மதுரை to பெங்களூரு.! வந்தே பாரத் ரயில் நேரம், டிக்கெட் விவரங்கள்…

new Vande Bharat trains

சென்னை : சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு மற்றும் மீரட் – லக்னோ ஆகிய மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி  வைத்தார். அதில், தமிழக மக்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், அதிந வீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்படுகிறது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் சேவையை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் ரயில் நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பங்கேற்றார். மேலும், சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் நடந்த விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

ஏற்கனவே, தமிழகத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இதன்மூலம் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் மொத்த எண்ணிக்கை 7 அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சாதாரண வகுப்பில் ஆயிரத்து 760 ரூபாயும், உயர் வகுப்பில் மூன்றாயிரத்து 240 ரூபாயும் கட்டணமும் நீர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ரயில்கள் இயக்கப்படும் நேரம், வழித்தடம் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எழும்பூர் – நாகர்கோவில் வந்தேபாரத் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரையில் நின்று செல்லும் எனவும், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் கரூர், நாமக்கல், சேலத்திலும் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் ரயில்

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து (வண்டி எண் – 20627) அதிகாலை 5 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நெல்லைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து, 12.32 புறப்படுகிறது. நாகர்கோவிலை 1.50 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் (வண்டி எண் – 20628) நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 3.18 மணிக்கு வந்து, 3.20 மணிக்கு புறப்படுகிறது. சென்னையை இரவு 11 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டுள்ளது.

மதுரை – பெங்களூரு ரயில்

மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரெயில் (வண்டி எண் – 20671) மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு கண்டோன் மென்ட் நிலையத்தை மதியம் 1 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் (வண்டி எண் – 20672) பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரயில் இரு மார்க்கத்திலும் கிடையாது.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் கட்டணம் விவரம்

சேர்கார் சேர்கார் எக்சிகியூட்டிவ்

சேர்கார்

எழும்பூர் – தாம்பரம் ரூ.380 ரூ.705
எழும்பூர் – விழுப்புரம் ரூ.545 ரூ.1055
எழும்பூர் – திருச்சி ரூ.955 ரூ.1790
எழும்பூர் – திண்டுக்கல் ரூ.1105 ரூ.2110
எழும்பூர் – மதுரை ரூ.1200 ரூ.2295
எழும்பூர் – கோவில்பட்டி ரூ.1350 ரூ.2620
எழும்பூர் – நெல்லை ரூ.1665 ரூ.3055
எழும்பூர் – நாகர்கோவில் ரூ.1760 ரூ.3240

 மதுரை – பெங்களூரு கட்டணம் விவரம்

 மதுரை – பெங்களூரு

சேர்கார்

எக்சிகியூட்டிவ்

சேர்கார்

நாகர்கோவில் – நெல்லை ரூ.440 ரூ.830
நாகர்கோவில் – கோவில்பட்டி ரூ.515 ரூ.985
நாகர்கோவில் – மதுரை ரூ.735 ரூ.1405
நாகர்கோவில் – திண்டுக்கல் ரூ.850 ரூ.1635
நாகர்கோவில் – திருச்சி ரூ.1000 ரூ.1945
நாகர்கோவில் – விழுப்புரம் ரூ.1510 ரூ.2775
நாகர்கோவில் – தாம்பரம் ரூ.1700 ரூ.3175
நாகர்கோவில் – எழும்பூர் ரூ.1735 ரூ.3240

இந்த கட்டணம் உணவுக்கும் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமாகும். உணவு இல்லாமல் சேர்கார் கட்டணத்தில் ரூ.310-ம், எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணத்தில் ரூ.440-ம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்