பிரதமர் மோடி பணமூட்டையுடன் பொய் மூட்டையும் கொண்டு வந்துள்ளார் – முக ஸ்டாலின்
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பொய் மூட்டையையும் கொண்டு வந்துள்ளார் என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வரும் பணமூட்டையைத்தான் கொண்டு வருவார் என நினைத்தேன், ஆனால், மீனவர்களை பாதுகாப்பது தான் தங்கள் அரசின் முன்னுரிமை என்று கூறி, பொய் மூட்டையையும் கொண்டு வந்துள்ளார் என விமர்சித்துள்ளார்.
இணைய துறைமுகம் வேண்டாம் என கன்னியாகுமரி மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அங்கு வந்த பிரதமர் மோடி, மீனவர்களின் வாழக்கையை மேம்படுத்த பெயர் குறிப்பிடாமல் துறைமுகம் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார் என முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.