தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு காரில் வந்தடைந்த பிரதமர் மோடி ,பின் மேடையில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.பின்பு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.
இதன் பின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்,பிரதமர் வருகையால் தமிழகம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.அதிமுக அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு அளித்து வருகிறார்.
சிறந்த முதலீட்டுக்கான தளமாக தமிழகம் மாறி உள்ளது. சிறந்த மாநிலத்துக்கான விருதுகளை தமிழகம் 3 முறை பெற்றுள்ளது. நல் ஆளுமைக்கான மத்திய அரசு விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது என்று பேசினார்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…