இன்று மொழி வாரி மாநிலங்கள் உதயமாகி நாள் அந்தந்த மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு தனி மாநிலமாக உதித்த நாளாகும்.
1956 ஆண்டு நவம்பர் 1ந்தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகியது. மெட்ராஸ் பிரெசிடென்சியில்அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன.
இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதனை அடுத்து தமிழ்நாடு தனி மாநிலம் உருவாகியதை “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு போல ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தனி மாநிலம் உருவான நாள் என அம்மாநிலங்களும் ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாரத பிரதமர் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உதயமான நாளை முன்னிட்டு அந்தந்த மாநில மொழிகளில் வாழ்த்துக்களை தெரிவித்தவர் தமிழ்நாடு நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது பேசு பொருளாகியுள்ளது.
பாரத பிரதமர் இன்று காலை 7 மணி முதல் 7.15 மணி வரை அடுத்தடுத்து கர்நாடகா, கேரளா,ஆந்திரா மாநிலங்கள் உருவான நாளை முன்னிட்டு அந்தந்த மாநில மொழிகளான கன்னடம் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழியிலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்தார்.
இதே போல மத்திய பிரதேச மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆனால் இதே நாளில் தான் தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாகியது ஆனால் தமிழ்நாடு நாளுக்கு வாழ்த்து பிரதமர் தெரிவிக்காதது மக்கள் மத்தியில் பேசு பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…