முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போனில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி…!
பிரதமர் மோடி அவர்கள், முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி அவர்கள், முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்ற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் அவர்களின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன் என உறுதியளித்துள்ளார்.