பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை
பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தெலுங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது .தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்கிறது. கடுமையாக உழைத்து தேச பற்று இருந்தால், ஆளுநராக அமரலாம்.
அப்துல் கலாமின் 2020 என்ற புத்தகத்தின் படி, பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார்.நெகிழி இல்லாத இந்தியாவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர். பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.