பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு !ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
பிரதமர் மோடி – சீன அதிபரின் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி – சீன அதிபரின் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக டிஜிபி திரிபாதி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோரை நேரில் அழைத்து முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் வாழ்த்தை தொடர்ந்து, வாக்கி டாக்கி மூலம் அனைத்து காவலர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன்.