திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38- ஆவது பட்டமளிப்பு விழா, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் இன்று வந்தடைந்தார்.
அப்போது, தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டார் பிரதமரை வரவேற்றனர். அதன் பிறகு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு முதல்வர், பிரதமர், ஆளுநர் என மூவரும் சாலை மார்க்கமாக சென்றனர்.
அப்போது, பிரதமர் மோடிக்கு வழிநெடிங்கிலும் பாஜகவினர் மலர்தூவி நல்ல வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி.! அடுத்தடுத்த நிகழ்வுகள்…
பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இந்த நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, பட்டமளிப்பு விழாவில், ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்துள்ளனர்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் உரையில், நாம் சிறந்த மாநிலமாக இருக்கிறோம். திராவிட மாடல் அரசு அனைவருக்குமான அரசாக செயல்பட்டு வருகிறது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவரும் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம் என கூறியுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆளுநர் ஆர் என் ரவியும் அமர்ந்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…