பாஜகவின் பொது கூட்டம், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தடைந்தார். இதற்கு முன்பாக இன்று காலை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு விண்வெளி சார்ந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இதன்பின் அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள நான்கு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படை தளத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெற உள்ள திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு வந்தடைந்தார்.
எனவே, இன்னும் சற்று நேரத்தில் பல்லடத்தில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இதனை முடித்துக்கொண்டு இன்று மாலை விமானம் மூலம் மதுரை செல்ல சென்று அங்கு சிறு குறு தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளார் பிரதமர் மோடி.
அதன் பிறகு இரவு 8 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்கிறார். இன்று இரவு திருப்பரங்குன்றத்தில் தங்கும் பிரதமர் மோடி, நாளை தூத்துக்குடி , நெல்லைக்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின் மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…