மதுரைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.!
பிரதமர் மோடி பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தடைந்தார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு தற்போது வந்தடைந்துள்ளார்.
பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்ற மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.