இரண்டாம் கட்ட பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகின்ற 14-ஆம் தேதி தமிழகம் வர உள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.ஏற்கனவே ராகுல் காந்தி வந்த நாளில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்தார்.
பின் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகின்ற 14-ஆம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.பிரதமர் பயணம் மேற்கொள்ளும் அதே நாளில் ராகுல் காந்தி வருகிறார்.இரு முக்கிய தலைவர்களும் தமிழகத்திற்கு வருவது முக்க்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…