அடுத்தடுத்து தமிழகம் வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா..
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரின் அடுத்தடுத்து வருகையால், தமிழக அரசியலில் பரபரப்பு.
திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். எனவே, காந்தி கிராம கிராமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 11-ஆம் தேதி தமிழகம் வர உள்ளார்.
பிரதமர் திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்னை கலைவாணர் அரங்கில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் வரவுள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் வருகையால், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவை நிலைநாட்டுவதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் ஆளும் கட்சி திமுகவாக இருந்தாலும், நாங்கள் தான் உண்மையான எதிர்கட்சி என்றும் பேசி வருகின்றார். இந்த சமயத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரும் 11, 12-ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு அடுத்தடுத்து வர உள்ளனர்.