இந்தியாவை நம்பர் 1 நாடாக்க பிரதமர் மோடி இலக்கு – ஆளுநர் ஆர்என் ரவி

Default Image

இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு தான் என ஆளுநர் ஆர்என்.ரவி பேச்சு.

சென்னை எம்ஆர்சி நகரில் மீன்வளத்துறை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மீன் வளத்துறை அமைச்சர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்தியாவை உலகில் முதன்மை நாடாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றும்  இதற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்தியா ஒரு இலக்கோடு செயல்பட்டு வருகிறது. உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றுவது தான் நமது இலக்கு. உலகின் முதன்மை நாடாக மாற்றுவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்தியா பெற்றுள்ளது. கடந்த காலங்களை போல இல்லாமல் இப்போது வளர்ச்சி வேகமாக உள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முழக்கத்துடன் நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி உழைத்து வருகிறார் என தெரிவித்த ஆளுநர், இந்தியாவில் ஆன்மிக தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
TNPSC MainExam
ByeElection
ind vs eng 2 odi
seeman about stalin
t20 world cup 2024
Vikram Misri