சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை பள்ளிகரணை அருகே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.பல தரப்பினரும் இதற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.பின்னர் அங்கிருந்த பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது.மேலும் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் இன்று சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.