பிரதமர் வாய்ப்பு வந்தால் தட்ட வேண்டாம் – மாநாட்டில் அன்பில் மகேஷ் பேச்சு.!

Anbil Mahesh - mk stalin

இன்று சேலத்தில் நடைபெற்று வரும் இளைஞர் அணி மாநாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் அடுத்த பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கூறிஉள்ளார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு  நடைபெற்று வருகிறது.

இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாடு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 22 தலைப்புகளில் சொற்பொழிவரங்கம் நடைபெற்றது. அதனபடி, இந்த மாநாட்டில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘தமிழ்நாட்டின் கல்வி புரட்சி’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு விஷயங்களை குறித்து பேசினார்.

திமுகவின் 2-வது இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்காலங்களில் கொண்டு வந்த மாணவர்களுக்கான நலத் திட்டங்கள் மூலம் இன்று தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “INDIA கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதலமைச்சர் பக்கம் திரும்பியுள்ளது. நீங்கள் கைக்காட்டும் நபர் தான் அடுத்த பிரதமர் என்று இந்தியா கூட்டணியில் சொல்கிறார்கள். இதனால், பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம், அதையும் ஒரு கை பார்ப்போம்” என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள் வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்