சென்னை:பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம்? போன்றவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்,கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம்,பள்ளியில் பாலியல் புகார் பெட்டிகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு,காலாண்டு தேர்வு ரத்தான நிலையில்,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம்? என்பது குறித்தும் நாளை ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…