பாலியல் புகாரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது!
மாணவி புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இன்று கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலியல் புகாரில் சிக்கிய நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தது தனிப்படை போலீஸ். வெளியூர் தப்பி செல்ல முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் வைத்து தனிப்படை போலீஸ் இன்று அதிரடியாக கைது செய்துள்ளது.
சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகர்கோவிலில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தது தனிப்படை போலீஸ். பேச்சிப்பாறையை சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் கைது செய்யப்பட்டார்.