உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை சரிந்தது.! ரூ.200-லிருந்து ரூ.40-க்கு விற்பனை!
- நேற்று முன் தினம் வரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமோக விளைச்சல் பெற்று உள்ளது.
- இதனால் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது ரூ.60 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை மற்றும் விளைச்சல் குறைவால் வெங்காயத்தின் விலை உயர்ந்தது.இதனால் நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது.தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த போது வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்து வந்தது. அதனால் பெரிய வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்தது.
ஆனால் சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்படாத காரணத்தினாலும் , விளைச்சல் குறைவாலும் விலை உச்சத்திலேயே இருந்து வந்தது.நேற்று முன் தினம் வரையிலும் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் அமோக விளைச்சல் பெற்று உள்ளது.
விலையேற்றத்தால் பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு உள்ளது.இதேபோன்று வெளிமாநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட காரணத்தினாலும் சந்தையில் தற்போது சின்ன வெங்காயத்தின் வரவு அதிகாரித்து உள்ளது.இதனால் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது ரூ.60 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்தடுத்து வரும் நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.