ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தக்காளி விலை ..! மக்கள் அதிர்ச்சி ..!
தக்காளி : நம் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறிகளின் விலையானது உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. அதிலும் தக்காளியின் விலையானது ராக்கெட் வேகத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது.
அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளி நமக்கு இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூ.40 என்று விறக்கப்பட்டது.
இன்றைய நாளில் ஒரு கிலோ தக்காளியின் விலையானது ராக்கெட் வேகத்தில் எகுறி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அண்டைய மாநிலங்களில் மழை பொழிவு நீடித்தால் தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம் தக்காளி விலை இப்படி அதிகரித்தாலும் இதர காய்கறிகளின் விலையானது பெரிய அளவில் உயரவில்லை. அதன்படி பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.60 -க்கும், பீட்ரூட் ரூ.55-க்கும், உருளைக்கிழங்கு ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.