#BREAKING: தமிழகத்தில் 18+வயதினருக்கு தடுப்புத் திட்டம் தொடக்கம்..!
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், திருப்பூரில்
18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரனோ தடுப்பூசி போடும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நியூ திருப்பூர் பகுதியில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் தடுப்பூசி திட்டம் தொடங்கி தொடங்கப்பட்டது.
தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.