கொரோனா தடுப்பு – தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் கடிதம்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 17-ஆக இருந்த கொரோனா தொற்று மார்ச் 15ல் 258 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் எண்ணிக்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.