கோவை பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று கைது செய்யப்பட்டார். உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து த.பெ.தி.க.வினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து பீளமேடு போலீசார் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்து, செய்தனர். வன்முறை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான, கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் ஜாமீன் மனு, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.