“பத்திரிக்கையாளர் நல வாரியம்” அரசாணை வெளியிட்டது- தமிழக அரசு..!
“பத்திரிக்கையாளர் நல வாரியம்” அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
2021-2022-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் “தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.
அதனை செயல்படுத்தும் விதமாக உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம்” ஒன்றை உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு#TNGovt pic.twitter.com/ojDc63ULxy
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 3, 2021