குடியரசு தலைவர் வருகை – தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!

தமிழகத்திற்கு குடியரசு தலைவர் வருகையையொட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார் என பாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். படம் திறப்பு விழாவில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசுத் தலைவரின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025