முதுமலை யானைகள் முகாமிற்கு குடியரசு தலைவர் வருகை..! வரும் 5ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!

Droupadi Murmu

குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு முதுமலை யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வரும் 5ம் தேதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க, முதுமலைக்கு வருகை தர உள்ளார். ‘The Elephant Whisperers’ ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், முதுமலையைச் சேர்ந்த பொம்மன்பெள்ளி நாடு முழுவதும் பிரபலமாகினர்.

இதனை தொடர்ந்து, ஆஸ்கர்  விருது வென்ற பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் என பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்