குடியரசு தலைவர் வருகை..! இன்று முதல் கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..!
குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை சூலூர் விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 5 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நேற்று சட்டப்பேரவையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, இன்று காலை கோவையில் இருந்து உதகை செல்லவுள்ளார். இதனையடுத்து, கோவை ஆட்சியர் சமீரன் அவர்கள், கோவை சூலூர் விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை வித்து உத்தரவிட்டுள்ளார்.