2026 இலக்கு…முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் – புஸ்ஸி ஆனந்த்!
நடிகர் விஜய் சமீபத்தில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி தொடங்கியது முதல் அவர் மீது காரசாரமான விமரசனைகள் குவிந்த வண்ணமே வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ‘விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களாக உள்ளவர்கள், இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள்’ என விஜய் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசியதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடித்தனார். அதில், 2026 சட்டசபை தேர்தல் தான் தமது இலக்கு என்றும், 2026 தேர்தல் வெற்றிக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று கூறியதோடு, 2026-ல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அது உங்கள் கையில் உள்ளது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகின்ற ஒரே தலைவர் விஜய், அவர்தான் நமது தலைவர் ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் நிற்பதாக கருத வேண்டும். இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள். தலைவர் வெற்றிக்காக உழைக்க வேண்டும், நம் தளபதி விஜய் அவர்கள் அரசியலில் முன்னெடுக்க வேண்டிய முதல் வியூகம் நடை பயணமாக இருக்க வேண்டும்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்!
எந்த பாகுபாடும் இல்லாமல் மக்கள் பணியாற்றவும், கட்சிப் பெயரை பிரபலப்படுத்தவும் என தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியில் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.