சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து தலைவர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகரும், த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் ஒரு பக்கம் சினிமா மீது கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், மற்றோரு பக்கம் அரசியலில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அவருடைய அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். த.வெ.க கட்சியின் கோடியை அறிமுகப்படுத்தும் இந்த விழா வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வந்தது. தற்போது அந்த வேலை நிறைவடைந்துள்ள நிலையில், கம்பத்தில் மஞ்சள் நிற துணியில் விஜய் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்த கொடி ஏற்றி ஒத்திகையும் பார்க்கப்பட்டது.
வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கட்சிக் கொடி மட்டுமின்றி கட்சிக்கான பாடலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளதாகவும், பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வருகின்ற செப்டம்பர் மாதம் விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…