போஸ்டர் அடி., அண்ணன் ரெடி.! பாடலுடன் அறிமுகம் ஆகும் த.வெ.க கட்சி கொடி!

TVK VIJAY

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து தலைவர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகரும், த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் ஒரு பக்கம் சினிமா மீது கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், மற்றோரு பக்கம் அரசியலில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அவருடைய அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். த.வெ.க கட்சியின் கோடியை அறிமுகப்படுத்தும் இந்த விழா வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வந்தது. தற்போது அந்த வேலை நிறைவடைந்துள்ள நிலையில், கம்பத்தில் மஞ்சள் நிற துணியில் விஜய் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்த கொடி ஏற்றி ஒத்திகையும் பார்க்கப்பட்டது.

வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கட்சிக் கொடி  மட்டுமின்றி கட்சிக்கான பாடலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பாடலை எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளதாகவும், பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வருகின்ற செப்டம்பர் மாதம் விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்