குடியரசுத்தலைவர் ஜூன் 5இல் தமிழகம் வருகை; கிண்டி மருத்துவமனை திறந்துவைப்பு.!
முதல்வரின் அழைப்பை ஏற்று, குடியரசுத்தலைவர் ஜூன் 5இல் கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின், இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து பேசினார், அப்போது கலைஞரின் புத்தகத்தை சிறப்பு பரிசாக வழங்கினார், மேலும் சென்னை கிண்டியின் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை, நேரில் வந்து திறந்து வைக்க வேண்டுமாறு அழைப்பு விடுத்திருந்தார், இந்த அழைப்பை ஏற்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஜூன் 5இல் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.<
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சந்தித்து, சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடி செலவில், 1000 படுக்கை… pic.twitter.com/zYD3wzB4Wq
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 28, 2023
/p>