#Breaking:குடியரசுத் தலைவர் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்…!

Default Image

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதியம் தமிழகம் வருகிறார்.மேலும்,ராஜ்பவன் சென்று தங்கி இருந்து,பின்னர் மாலை 5 மணிக்கு செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ,குடியரசுத் தலைவரும் ஒரே மேடையில் அமர்ந்து பங்கேற்க உள்ளார்கள்.மேலும்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.1 மணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சியில்,மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,சென்னை மாகாணத்தின் சட்டமன்றம் உருவான 100 வது விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.இதனையடுத்து, மறுநாள் காலை கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஊட்டி செல்கிறார்.4 மற்றும் 6 ஆம் தேதி வரை ஊட்டியில் தங்கி ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்,தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெறவுள்ளது. முன்னதாக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்,கருணாநிதி உருவப்படம் திறக்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்