#Breaking:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஊட்டி பயணம் ..!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையிலிருந்து,ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
தமிழ்நாட்டிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று வருகை புரிந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,நேற்று சட்டபேரவையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில்,நான்கு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் தனி விமானம் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.மேலும்,ராஜ்பவனில் இருந்து கிண்டி விமான நிலையத்திற்கு செல்லும் அவரை வழியனுப்புவதற்காக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர்,தமிழக டிஜிபி உள்ளிட்டோர்,மூத்த அமைச்சர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் அவர்,கோவையிலிருந்து ஹெலிஹாப்டர் மூலம் ஊட்டி சென்று ராஜ்பவனில் தங்குகிறார். இதனையடுத்து,நாளை காலை ஊட்டியில் உள்ள இராணுவக் கல்லூரியில் பயிற்சி பெரும் முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளார்.இதனைத் தொடர்ந்து,பழங்குடி கிராமத்திற்கு சென்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.மேலும்,மறுநாள் தேயிலை தொழிற்சாலையை பார்வையிட உள்ளார்.இதனையடுத்து,வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து,அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.